புதுச்சேரி

கோப்பு படம்.

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2023-02-27 12:01 IST   |   Update On 2023-02-27 12:01:00 IST
  • வில்லியனூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • அப்போது அந்த வாலிபர் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர் அருகே கூனிமுடக்கு-வழுதாவூர் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் கண்காணித்தனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுக்கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து அவரது சட்டைபையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தார்.

மொத்தம் 150 கிராம் கஞ்சாவை அந்த வாலிபர் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த தினா என்ற தினகரன்(20) என்பதுதெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News