புதுச்சேரி

தமிழ் சங்க விருது வழங்கிய காட்சி.

புதுவை ஆசிரியருக்கு தமிழ் சங்க விருது

Published On 2022-10-31 14:31 IST   |   Update On 2022-10-31 14:31:00 IST
  • தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் இலக்கிய விழா நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த மாத நிகழ்வாக தமிழ் செம்மொழி நாள் விழா, கவிஞர் புதுவை சிவம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
  • மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பாவனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி:

தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் இலக்கிய விழா நடைபெறுகிறது.

அந்த வகையில் இந்த மாத நிகழ்வாக தமிழ் செம்மொழி நாள் விழா, கவிஞர் புதுவை சிவம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார்.

செயலாளர் சீனுமோகன் தாசு வரவேற்றார். துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பாவனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து நடந்த உரையரங்கில் பூங்கொடி பராங்குசம், சிவ. இளங்கோ ஆகியோர் பேசினர். ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு வீர. பாலகிருஷ்ணன் "என்றும் வாழும் எங்கள் சிவம் "என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கலியபெருமாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் 13 பேர் கலந்து கொண்டு கவிஞர் புதுவை சிவம் குறித்து கவிதை வழங்கினர்.

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர சுதர்சனன், தேசிய நல்லாசிரியர் பசுபதிராஜன், பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோருக்கு புதுவை தமிழ்ச் சங்க விருது வழங்கப்பட்டது.

முடிவில் ஆட்சிக்குழு உறுப்பினர் தினகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News