புதுச்சேரி
காதலன் இறந்த துக்கத்தில் நர்சிங் மாணவி தற்கொலை
- கஞ்சா புகைக்கும் பழக்கம் உடைய சின்னா கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- காதலனின் நினைவால் துக்கம் தாங்காத மிசெல்லா மவுனிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் யு.கே.வி. நகரை சேர்ந்தவர் சிம்காசலம். இவரது மகள் மிசெல்லா மவுனிகா (வயது 22). பெற்றோரை இழந்த இவர் தனது மாமா கோட்டா தருமூர்த்திலு வீட்டில் தங்கியிருந்து பி.எஸ்சி. நர்சிங் 2-வது ஆண்டு படித்து வந்தார்.
மிசெல்லா மவுனிகா குருசாம்பேட்டையை சேர்ந்த சின்னா என்பவரை காதலித்து வந்தார். கஞ்சா புகைக்கும் பழக்கம் உடைய சின்னா கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மவுனிகா வேதனையில் இருந்து வந்தார். காதலனின் நினைவால் துக்கம் தாங்காத மிசெல்லா மவுனிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.