வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய காட்சி.
null
டேபிள் டென்னிஸ் பரிசளிப்பு விழா
- டேபிள் டென்னிஸ் போட்டிகள் அமலோர்பவம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
- இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி
புதுவை மாநில டேபிள் டென்னீஸ் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான டேபிள் டென்னீஸ் போட்டிகள் அமலோர்பவம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 10 பிரிவுகளில் புதுவையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாநில டேபிள் டென்னீஸ் கழக தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். பட்டர் பிளை டேபிள் டென்னீஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தலைமை விருந்தினராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சிவக்குமார் சிறப்பு விருந்தினராக மாநில டேபிள் டென்னீஸ் கழக கவுரவ செயலாளர் ஐயப்பன் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் நிர்வாகிகள் கோவிந்த ராஜூ, ராஜூ, சுந்தரவரதன், சூசை, கிருஷ்ண மூர்த்தி, சதீஷ், வேலாயுதம், பாலசுப்பிரமணி, பழனி அய்யப்பன், அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டர்பிளை டேபிள் டென்னீஸ் கிளப் செயலாளர் முரளி நன்றி கூறினார்.