புதுச்சேரி
நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் காத்திருந்த காட்சி.
- புதுவை லாஸ்பேட்டையில் நாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர்.
- மாணவர்களை இறக்கி விட வந்த பெற்றோர்களும் காத்துக்கிடந்தனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டையில் நாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். காலை 8.45 மணியாகியும் பள்ளியின் நுழைவுவாயில் திறக்கப்படவில்லை. இதனால் காலை 7.30 மணி முதல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளியின் வாசலில் காத்திருந்தனர்.
மாணவர்களை இறக்கி விட வந்த பெற்றோர்களும் காத்துக்கிடந்தனர். காலை 8.45 மணிக்கு ஆசிரியர் வந்து பள்ளியினை திறந்தார். இதன்பின் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
பள்ளியினை நேரத்தோடு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.