சார்காசிமேடு கிராமத்தில் நடக்கும் கபடி போட்டியினை துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
- துணை சபாநாயகர்ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த சார்காசிமேடு கிராமத்தில் அம்பேத்கர் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுவை மாநில கபடி சங்க அனுமதியுடன் வாணிதாசன் விளையாட்டுக் கழகம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
புதுவை கபடி சங்க செய்தி தொடர்பாளர் பூபாலன் சங்க கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு புதுவை மாநில கபடி சங்க பொதுச் செயலாளர் ஆரிய சாமி, பொருளாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டி யில் சுமார் 52 அணிகள் பங்கேற்று ஆட உள்ளனர்.
இதற்கான இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடுகளை சார்க்காசி மேடு வாணிதாசனார் கபடி கழக நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் செய்து வருகின்றனர்.