மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சிவா எம்.எல்.ஏ., ஆய்வு செய்த காட்சி.
அரசு பள்ளிகளில் சிவா எம்.எல்.ஏ., ஆய்வு
- தொ.மு.ச. சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
- மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து, உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதிக் குட்பட்ட கொம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொ.மு.ச. சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இதனை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பேனா, நோட்டு உள்ளிட்ட எழுதுப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினார்.தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து, உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
பெரிய பேட்டில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கழிப்பிட கட்டிடம் சேதம் அடைந்துள்ளதாக புகார் வந்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் சிவா அப்பள்ளிக்கு சென்று சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்டார். பின்னர், அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைந்து சரி செய்யும் படி வலியுறுத்தினார்.
அப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை எதிர்க்கட்சி தலைவர் சிவா சாப்பிட்டு உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
இதில் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி துணை செயலாளர் அங்காளன், கிளை செயலாளர் செல்வநாதன், தொகுதி இளைஞரணி அமைப்பா ளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.