புதுச்சேரி

ஆரோவில் வாசிகள் மவுன போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

தாக்குதலை கண்டித்து மவுன போராட்டம்

Published On 2022-07-29 09:19 GMT   |   Update On 2022-07-29 09:19 GMT
  • ஆரோவில் சர்வதேச நகர கவுன்சில் செயலராக இருப்பவர் சத்தியா.
  • ஆரோவில் நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் ஆரோவில் டவுன்ஹால் நிர்வாகி பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லீவா என்ற பெண்மணி தடுத்தார்.

புதுச்சேரி:

ஆரோவில் சர்வதேச நகர கவுன்சில் செயலராக இருப்பவர் சத்தியா. இடையஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்த இவரை  ஆரோவில் நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் ஆரோவில் டவுன்ஹால் நிர்வாகி பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லீவா என்ற பெண்மணி தடுத்தார். மேலும் அவர் தள்ளிவிட்டதில் சத்யா கீழே விழுந்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரோவில் கவுன்சில் செயலர் சத்தியா அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் வெளிநாட்டு பெண் தடுத்து தாக்கும் காட்சி வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சத்யா தாக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரோவில் வாசிகள் இன்று டவுன்ஹால் வளாகத்தில் மவுன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு மித்ரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News