கருத்தரங்கில் தங்கள் கருத்துகளை பதிவு செய்த மாணவிகளுக்கு பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் புத்தகம் பரிசாக வழங்கிய காட்சி.
- பொதுத்தேர்வு எதிர்கொள்ளும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தன்னம்பிக்கையோடு தேர்வை சந்திக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
- நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியை ஆல்பர்ட் ரமனா வரவேற்று பேசினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் தன்னம்பிக்கை கருத்தரங்கம் நடந்தது.
பொதுத்தேர்வு எதிர்கொள்ளும் மேல்நிலை ப்பள்ளி மாணவிகள் தன்ன ம்பிக்கை யோடு தேர்வை சந்திக்க ஆலோசனை வழங்கப்ப ட்டது.
கருத்தரங்கிற்கு திட்ட அலுவலர் ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியை ஆல்பர்ட் ரமனா வரவேற்று பேசினார்.
தாகூர் கலைக்கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் தேர்வும் தன்னம்பிக்கையும் என்ற தலைப்பி்ல் சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கில் தங்கள் கருத்துகளை பதிவு செய்த மாணவிகளுக்கு பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் புத்தகம் பரிசாக வழங்கினார்.
முடிவில் திட்ட அலுவலர் டாக்டர் குமரன் நன்றி கூறினார்.