புதுச்சேரி

திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர்கோவில் வளாகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மரக்கன்று நட்ட காட்சி.

மரக்கன்று திட்டம் - அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் துவக்கி வைத்தார்

Published On 2022-07-02 06:44 GMT   |   Update On 2022-07-02 06:44 GMT
  • புதுவையில் வன வார விழாவை ஒருமாதம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளளது.
  • அரசின் வனத்துறை மற்ற அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மாணவர்களோடு இணைந்து மரம் நடு விழாவை கொண்டாட உள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் வன வார விழாவை ஒருமாதம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளளது.

புதுவை அரசின் வனத்துறை மற்ற அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மாணவர்களோடு இணைந்து மரம் நடு விழாவை கொண்டாட உள்ளது.

புதுவை முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இந்த ஒரு மாதத்தில் 50 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள், பிற மரக்கன்றுகள் 10 ஆயிரம் வழங்குதல், மரங்களை சுத்தப்படுத்துதல், பனைவிதை நடுதல்,சைக்கிள் விழிப்புணர்வு, மாணவர்களுக்கு போட்டிகள், கருத்தரங்கு, வன பாதுகாப்பு ப யிற்சி என பல நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் தொடக்க விழா திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. அமைச்சர் தேனீஜெயக்குமார் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு தேக்கு மரக்கன்றுகளை வழங்கி நவகிரகங்களுக்கு உரிய மரங்களை நட்டார். துறை செயலர் ரவிபிரகாசம், வன அதிகாரிகள் சத்தியமூர்த்தி, வஞ்சுள வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News