கோப்பு படம்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விதிகளை பின்பற்ற வேண்டும்
- இந்து முன்னணி நிர்வாகிகளிடம் போலீசார் வலியுறுத்தல்
- கடலில் கொண்டு கரைப்பதற்கும் அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை யொட்டி புதுவை நகரப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை, இந்து முன்னணி சார்பில் 120 இடங் களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள் ளது.
சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இதேபோல் கோவில்கள் உள்பட பல் வேறு இடங்களிலும் சிலை கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
இதைத்தொடர்ந்து 5 நாட் கள் சிறப்பு பூஜைகள் செய் யப்படுகின்றன. விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், அதனை கடலில் கொண்டு கரைப்பதற்கும் அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
மேலும் வருகிற 22-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்ப
டுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன் னிட்டு வீடுகளில் வைத்து வழிபட சிறிய சிலைகளின் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. மண் சிலைகள் ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதுவையில் விநாயகர் சதுர்த்திவிழா கொண்டா ட்டம் தொடர்பாக எஸ்பி சுவாதிசிங் தலைமையில் துறை அதிகாரிகள், விழா பேரவை, இந்து முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிழக்கு எஸ்.பி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எஸ்பி பக்த வச்சலம், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், வெங்கடாஜலபதி, தனசெல்வம், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்கனவே அறிவித்துள்ள விதிகளை பின்பற்ற வேண்டும். நடனமாடக்கூடாது. பொது மக்களுக்கு தொல்லை தரக்கூடாது. அமைதியாக ஊர்வலம் நடத்த வேண்டும். சிலைகளை முன்கூட்டியே வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிலைகளை கரைக்க 3 கிரேன் பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.