புதுச்சேரி
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் உதவிதொகையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் உதவிதொகை
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- காசோலையை உயிர் இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதியில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி பேரவையில் அறிவித்தி ருந்தார்.
இதற்கான காசோலையை உயிர் இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார். மேலும் கண் பார்வை குறைபாடு உள்ளவருக்கு தனது சொந்த செலவில் மருத்துவ பரிசோதனை செய்து இலவச கண்ணாடி வழங்கினார்.
நிகழ்ச்சியில் அன்வர், நிசார், செல்வம், கலப்பன், காளியம்மா, சந்துரு, மணி, கணேசன், கருப்பையா, வாசுதேவன், ராகேஷ், பாஸ்கல், தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.