புதுச்சேரி

கோப்பு படம்.

கோவில் உண்டியல் பணம் கொள்ளை

Published On 2023-03-12 11:04 IST   |   Update On 2023-03-12 11:04:00 IST
  • பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதி மக்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையும் செலுத்துவது வழக்கம்.
  • கோவில் சூலத்துக்கு முன்பு இருந்த 3 அடி உயரமுள்ள உண்டியலை காணாமல் பூசாரி திடுக்கிட்டார்.

புதுச்சேரி:

உருளையன்பேட்டை ராஜாநகரில் கோவில் உண்டியல் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுவை பஸ் நிலையம் பின்புறம் உருளையன்பேட்டை ராஜாநகரில் அய்யனார் கோவில் வீதியில் நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதி மக்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையும் செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கோவிலில் பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி ராஜநாராயணன் கோவிலை பூட்டி விட்டு சென்றார். வழக்கம் போல் பூஜை செய்ய பூசாரி நாராயணன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கோவில் சூலத்துக்கு முன்பு இருந்த 3 அடி உயரமுள்ள உண்டியலை காணாமல் பூசாரி திடுக்கிட்டார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் பின்புறம் உள்ள புற்றின் அருகே உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறை காசுகள் சிதறி கிடந்தது. யாரோ மர்ம நபர் நள்ளிர வில் சுவர் ஏறி குதித்து கோவிலில் புகுந்து உண்டியலை அடியோடு பெயர்த்து எடுத்து சென்று புற்றின் அருகே உண்டியலை உடைத்து அதில் இருந்து காணிக்கை (ரூபாய் நோட்டுகள் மட்டும்) எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோவிலின் அறங்காவலர் குழு பொருளாளர் செல்வராஜ் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணரை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். அதோடு அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து உண்டியல் கொள்ளையர்களை அடை யாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் உண்டியல் பணம் கொள்ளைபோன இடம் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். பஸ் நிலையம் மற்றும் ஓட்டல்கள், கடைகள் எப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கும் வேளை யில் மர்ம நபர்கள் துணிகர மாக கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடமும், பக்தர்க ளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News