புதுச்சேரி

கொரவள்ளிமேடு ஏரியை தூர் வாரும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

null

சாலை மேம்படுத்தும் பணி - செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-06-25 14:46 IST   |   Update On 2022-06-25 14:53:00 IST
  • பாகூர் தொகுதி மணப்பட்டு ரோடு, ரத்னா நகர், மாசிலாமணி நகர் பகுதிக்கு சாலை வசதி இல்லாமல் மழைகாலத்தில் அவதிப்பட்டு வந்தனர்.
  • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுத்து வந்தார்.

புதுச்சேரி:

பாகூர் தொகுதி மணப்பட்டு ரோடு, ரத்னா நகர், மாசிலாமணி நகர் பகுதிக்கு சாலை வசதி இல்லாமல் மழைகாலத்தில் அவதிப்பட்டு வந்தனர். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுத்து வந்தார்.

அதன்படி அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம், ரத்னா நகர் புதிய குடியிருப்பு பகுதிக்கு மண் சாலை அமைத்து மேம்படுத்த 6 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும், மாசிலாமணி நகரில் மண் சாலை அமைக்க 4 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவிலும், கொரவள்ளிமேடு, உமரன் காடு ஏரியை 21 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.31லட்சத்து 88ஆயிரம் ஆகும். இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு, பணியைத் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News