புதுச்சேரி

வாய்க்கால் அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி.

சாலை, வாய்க்கால் அமைக்கும் பணி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Published On 2022-07-28 06:16 GMT   |   Update On 2022-07-28 06:16 GMT
  • வாய்க்கால் மேம்படுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  • தி.மு.க. அவை தலைவர் ரவி, கிளை செயலாளர் செல்வம், சோழியன், சங்கரநாராயணன், காந்தி, பீட்டர், பாலாஜி, லாரன்ஸ், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட நேதாஜி நகர் 2-ல் தாழ்வான சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் உள்ள அனைத்து வீதிகளிலும் சைடு வாய்க்கால் மேம்படுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து, தாழ்வான பகுதியில் சாலை அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். நேதாஜி நகர் 2-ல் அப்பகுதி மக்கள், எம்.எல்.ஏ.விடம் நீண்ட நாள் கோரிக்கையாக விடுபட்ட சாலை மற்றும் எல்-வடிவ சைடு வாய்க்கால் அமைக்கக் கோரி தேர்தல் பிரச்சாரத்தின் போது கேட்டுக் கொண்டனர். அப்போது அளித்த வாக்குறுதியின் பேரின் நேதாஜி நகர் 2-ல் வீதிகளில் விடுபட்டுள்ள வாய்க்கால்களையும், சாலைகளையும் மேம்படுத்தி தருகிறேன் என எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

பின்னர் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். இதில் தி.மு.க. அவை தலைவர் ரவி, கிளை செயலாளர் செல்வம், சோழியன், சங்கரநாராயணன், காந்தி, பீட்டர், பாலாஜி, லாரன்ஸ், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News