புதுச்சேரி

கோப்பு படம்.

வருவாய் துறை சான்றிதழ்களை ஆன்லைனில் அளிக்க வேண்டும்

Published On 2023-06-11 05:53 GMT   |   Update On 2023-06-11 05:53 GMT
  • திடீரென்று இருப்பிட சான்று கைப்பட எழுதிக் கொடுப்பதற்கு காரணம் என்ன?
  • கையால் பெறப்பட்ட சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.

புதுச்சேரி:

சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (சுசி) மாநிலச் செயலாளர் லெனின்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற சாதி, இருப்பிட சான்றிதழ்களை தாலுக்கா அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வருவாய்துறை ஆன்லைன் மூலம் வழங்கி வந்தது. தற்போது ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ் மட்டும் வழங்கிவிட்டு இருப்பிட சான்றுகளை கைப்பட எழுதி கொடுக்கிறார்கள்.

திடீரென்று இருப்பிட சான்று கைப்பட எழுதிக் கொடுப்பதற்கு காரணம் என்ன? கணினி சர்வர் பாதிக்கப்பட்டு இருப்பதால் கையால் எழுதி கொடுப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சென்டாக் மூலம் விண்ணப்பம் கொடுப்பதற்கு ஒரு சில தினங்கள் இருக்கின்ற சூழலில் இருப்பிடச் சான்று சான்றிதழ் கையால் எழுதிக் கொடுப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் சென்டாக் மாணவர் சேர்க்கையில் மோசடி செயல்கள் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களை அபகரித்த செயல்கள் மக்களுக்கு தெரியும. அதுபோன்ற மோசடி சான்றிதழ்கள் பெறுவதற்கான முயற்சி நடக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியிலே நிலவுகிறது. ஆகவே, கையால் எழுதிக் கொடுக்கும் சான்றிதழ் முறையை ரத்து செய்து ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும். கையால் பெறப்பட்ட சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.

இவ்வாறு லெனின்துரை அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News