புதுச்சேரி

கோப்பு படம்.

இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது -மார்க்சிஸ்டு கண்டனம்

Published On 2022-11-06 04:11 GMT   |   Update On 2022-11-06 04:11 GMT
  • புதுவையில் நிரப்பப்பட உள்ள அரசு பணியிடங்களில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதை கடுமையாக எதிர்க்கிறோம்.
  • மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறைப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் நடை முறைப்படுத்தவில்லை.

புதுச்சேரி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் நிரப்பப்பட உள்ள அரசு பணியிடங்களில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதை கடுமையாக எதிர்க்கிறோம்.

அரசியல் அமைப்புச் சட்டம் 50 சதவீதம் வரையே இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் பொருளாதார ரீதியான பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு குறித்து வழக்கு நிலுவையில் உள்ளன. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறைப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் நடை முறைப்படுத்தவில்லை.

ஆகவே புதுவை மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய சமூகத்திற்கான இட ஒது க்கீட்டு அறிவிப்பை அதுவரை ரத்து செய்திட வேண்டும்

இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறீயுள்ளார்.

Tags:    

Similar News