புதுச்சேரி

காரைக்கால் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதத்தை எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்-தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2023-02-07 10:44 IST   |   Update On 2023-02-07 10:44:00 IST
  • காரைக்கால் மாவட்ட த்தில் கனமழை பெய்தது. கனமழையால் நெடுங்காடு, திருப்பட்டினம், அம்பகரத்தூர், கோட்டுச்சேரி உட்பட பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 12 ஆ யிரத்து 500 ஹெக்டேர் நெற்பயிர்கள் முழுமையாக சேதம டைந்தது.
  • காரைக்கால் மாவட்டத்தில் கனமழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் தலைமையில் குழு அமைத்து விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்ட த்தில் கனமழை பெய்தது. கனமழையால் நெடுங்காடு, திருப்பட்டினம், அம்பகரத்தூர், கோட்டுச்சேரி உட்பட பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 12 ஆ யிரத்து 500 ஹெக்டேர் நெற்பயிர்கள் முழுமையாக சேதம டைந்தது. பாதிக்கப்பட்ட நெடுங்காடு, திருப்படினம் உட்பட பல இடங்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன் ஆகியோர் தலைமையில் குழுவினர் சென்று விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.

இதன்பின் நாஜிம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் கனமழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் தலைமையில் குழு அமைத்து விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை எடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என தளர்வுகளையும் கோரியு ள்ளார்.

புதுவை முதல்-அமைச்சரும், பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். தமிழகம்போல பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News