புதுச்சேரி

கோப்பு படம்.

பெரிய மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம்

Published On 2023-08-26 10:26 IST   |   Update On 2023-08-26 10:26:00 IST
  • வையாபுரி மணிகண்டன் கோரிக்கை
  • வியபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 புதுவை பெரியமார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று 4 கட்டமாக பிரித்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெரியமார்க்கெட் வியாபாரிகள் அடங்கிய குழுவை அமைத்து வியாபாரிகளின் வசதிக்கு ஏற்ப புதிய வரைபடம் தயாரித்த பின்னர்தான் கட்டுமான பணியை தொடங்க வேண்டும்.

கட்டுமான பணியினால் வியபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும்.

எனவே தற்காலிக இடமாற்றம் செய்யப்படும் கடை வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரமும், அடிக்காசு வியாபாரிகளுக்கு ரூ.25 ஆயிரமும், காலி செய்யப்படும் கடைகள், அடிக்காசு கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

கடைகள், அடிக்காசு கடைகளை காலி செய்த நாள் முதல், கட்டுமான பணிகளை முடித்து வியாபாரிகளிடம் மீண்டும் கடைகளை ஒப்படைக்கும் வரை இந்த நிவாரணத்தை வழங்குவதாக முதல்- அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News