புதுச்சேரி

கோப்பு படம்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை-பா.ம.க. வலியுறுத்தல்

Published On 2023-03-30 04:53 GMT   |   Update On 2023-03-30 04:53 GMT
  • புதுவை மாநிலத்தில் போலியான அரசு வேலையை நம்பி பல குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து நடு ரோட்டுக்கு வந்துள்ளனர்.
  • மாநிலத்திலும் இணக்கமான கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதால் எந்தவித சிக்கலும் வராது.

புதுச்சேரி:

பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் போலியான அரசு வேலையை நம்பி பல குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து நடு ரோட்டுக்கு வந்துள்ளனர்.

புதுவையில் ஆளும் அரசாங்கமும், ஏற்கனவே ஆட்சி செய்தவர்களும் இளைஞர்களை வாக்கு அரசியலுக்காக அரசு வேலை என பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை , ரேஷன் கடை, கே.வி.கே., அரசு போக்குவரத்து கழகம் என பல்வேறு துறைகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்க ள் தங்களுடைய ஆதரவாளர்களை வேலைக்கு வைத்தனர்.

இதனை நம்பி தனியார் நிறுவனங்களில் நல்ல சம்ப ளத்துடன் வேலை செய்தவர்களும், சுயதொழில் வேலை செய்தவர்களும், பட்டதாரிகளும், தங்களுடைய பணியை துறந்து, அரசுபணி என நம்பி வேலைக்கு சேர்ந்தனர். ஒரு சிலர் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் பணம் கொடுத்தும் அரசு வேலையில் சேர்ந்துள்ளனர், தொடர்ந்து 10 ஆண்டுகளாக அவர்களுக்கு சரிவர சம்பளமும் வழங்கப் படவில்லை . அவர்கள் திடீரென எந்தவித முன்னறிவிப் பும் இன்றி பணி நீக்கம் செய்தனர்.

குறிப்பாக பொதுப்பணித்துறையில் வேலை செய்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், ரேஷன் கடை ஊழியர்கள் 700 பேரும், வேளாண் அறிவியல் நிலையத்தில் 150 ஊழியர்களும், பி.ஆர்.டி.சி.யில் 12 ஊழியர்களும் உரிய காரணம் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த ஊழியர்களின் குடும்பத்தினரையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

நிலுவை சம்பளத்தையும் கொடுக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதால் எந்தவித சிக்கலும் வராது.

புதுவை நாள்தோறும் போராட்டக் களமாக மாறி வருகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டதால் புதுவை மண்ணின் மைந்தர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே முதல்-அமைச்சர், துறையின் அமைச்சர்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பணி நீக்கம் செய் யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஊழியர்களுடன் இணைந்து நேரடியாக போராட்ட களத்தில் பா.ம.க. இறங்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News