புதுச்சேரி

ரேஷன்கடை ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

ரேஷன்கடை ஊழியர்கள் பேரணி - ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-19 09:15 GMT   |   Update On 2022-08-19 09:15 GMT
  • பாரதிய புதுவை நியாயவிலைக்கடை ஊழியர்கள் முன்னேற்ற சங்கம்சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடந்தது.
  • பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது.

புதுச்சேரி:

பாரதிய புதுவை நியாயவிலைக்கடை ஊழியர்கள் முன்னேற்ற சங்கம்சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடந்தது.

பேரணிக்கு கவுரவ தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். தலைவர் முருகானந்தம், துணைத்தலைவர் வெற்றி வேல்முருகன், செயலாளர் பிரேம்ஆனந்த், இணை செயலாளர்கள் ரமேஷ், அருள், வினோத்குமார், சக்திவேல், தட்சிணாமூர்த்தி உட்பட ரேஷன்கடை ஊழியர்கள் பலர் பேரணியில் கலந்துகொண்டனர்.

பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தரையில் அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

50 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம் சம்பளம் வழங்க வேண்டும். சிறப்பு நிதி ஒதுக்கி ஓய்வூதிய பண பலன்களை அளிக்க வேண்டும். 10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Tags:    

Similar News