வில்லியனூர் ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்ற காட்சி.
ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பங்கேற்பு
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா சார்பில் வில்லியனூர் ரெயில் நிலையத்தை சுற்றி ஜே.சி.பி. மூலமாக சுத்தம் செய்யும் பணி நடந்தது.
- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா சார்பில் வில்லியனூர் ெரயில் நிலையத்தை சுற்றி ஜே.சி.பி. மூலமாக சுத்தம் செய்யும் பணி நடந்தது.
இதில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் முன்னிலை வகித்தார்.
தூய்மை பணியின் போது பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயலாளர் அகிலன், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், வில்லியனூர் தொகுதி பொறுப்பாளர் கண்ணபிரான் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டு தூய்மை பணியினை மேற்கொண்டனர்.
ெரயில் நிலையம் தூய்மைப்படுத்தும் பணி ஏற்பாட்டினை மாநில துணைத் தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் அருணகிரி ஆகியோர் செய்து இருந்தனர்.