புதுச்சேரி

அமைச்சர் நமச்சிவாயாத்திடம் புதுவை மாணவி வாழ்த்து பெற்ற காட்சி.

ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் புதுவை மாணவி தேர்வு

Published On 2023-02-22 10:57 IST   |   Update On 2023-02-22 10:57:00 IST
  • ரோலர்ஸ்கேட்டிங் வீரரான இவர் விசாகப்பட்டினத்தில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலானபோட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார்.
  • தற்போது ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் மெர்லின் தனம்அற்புதம். இவர் பாரதிதாசன் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

ரோலர்ஸ்கேட்டிங் வீரரான இவர் விசாகப்பட்டினத்தில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ேபாட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார்.

வருகிற செப்டம்ரில் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

இதுகுறித்து மாணவி மெர்லின்தனம் அற்புதம் கூறும்போது, 3-ம் வகுப்பு படிக்கும்போது ரோலர்ஸ்கேட்டிங் விளையாட தந்தை ஊக்கம் அளித்தார். தனியார் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறேன்.

இந்தியளவில் 4 தங்கம், 3வெள்ளி பதக்கம் பெற்றுள்ளேன். தற்போது ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போட்டியல் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.

மாணவி மெர்லின் தனம் அற்புதம் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார், உடல்கல்வி இயக்குனர் தனலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

Tags:    

Similar News