புதுச்சேரி

புதுவை வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுப்பட்ட காட்சி.

புதுவை வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Published On 2023-09-01 13:38 IST   |   Update On 2023-09-01 13:38:00 IST
  • வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டன.
  • நாளையும் வக்கீல்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமையில் பொதுச்செயலாளர் கதிர்வேல், இணை செயலாளர்கள் சம்பத், திருமலை, ராஜன், பொருளாளர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளில் ஈடுபடாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டன. வழக்குகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

மத்திய அரசு புதிய சட்டங்களின் பெயர்களை அந்தந்த மாநில மொழியிலும், பொது மொழியான ஆங்கிலத்திலும் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த கோர்ட்டு புறக்கணிப்பு நடந்தது.நாளையும் வக்கீல்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Tags:    

Similar News