புதுச்சேரி

ஆரோவில் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.

போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2022-07-26 14:25 IST   |   Update On 2022-07-26 14:25:00 IST
  • அந்தப் பகுதியில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தனர்.
  • இதனை அறிந்த ஒரு சில இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய 4 இளைஞர்களை பிடித்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் 4 இளைஞர்கள் அந்தப் பகுதியில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தனர். அந்த போஸ்டரில் பாத்திரக்கடை உரிமையாளர் லட்சுமணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அறிந்த ஒரு சில இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய 4 இளைஞர்களை பிடித்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு விசாரணை மேற்கொண்ட தையடுத்து போஸ்டர் ஒட்டிய 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் பாத்திரக்கடை உரிமையாளர் லட்சுமண னின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சிற்றம்பலம் ஊராட்சி பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் சுமூகமாக இருக்கும் இங்கு வெவ்வேறு சமூகத்திற்கு இடையே கலவரத்தை உண்டாக்கும் முயற்சியில் ஒரு சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.

அப்போது போலீசா ருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீஸ் நிலையத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ‌

பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் முறையிடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் விழுப்புரம் சென்றனர்.

Tags:    

Similar News