இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய காட்சி.
இறந்த பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம்
- பாப்ஸ்கோ ஊழியர்கள் நலச்சங்கம்(ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் சட்டமன்றம் அருகே தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
- ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம் , ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
புதுச்சேரி:
பாப்ஸ்கோ ஊழியர்கள் நலச்சங்கம்(ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் சட்டமன்றம் அருகே தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
6-வது நாள் போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாப்ஸ்கோ ஊழியர் நல சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மோகன் மற்றும் குணா, கோவர்த்தனன்,பிரபு, ஏழுமலை, அமுதா , சரஸ்வதி, அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம் , ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டார்கள். 60 மாதம் சம்பளம் இல்லாமல் வறுமையின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த 21 பாப்ஸ்கோ தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
இருக்கும் தொழி–லாளர்களையும் சாக–விடாமல் அரசு காப்பாற்ற வேண்டும். 55 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்.
தீபாவளி பஜார் மானியத்தொகை ரூ.62 லட்சத்தை வழங்க வேண்டும். பாப்ஸ்கோ மதுபான உரிமத்தை தனியாருக்கு வழங்கி நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.