தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி மின்துறை அதிகாரியும் நேரில் சென்று பார்வையிட்ட காட்சி.
கோலாஸ் நகரில் மரம் சாய்ந்து மின் துண்டிப்பு
- கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கையால் உடனே சீரமைப்பு
- அங்கு மரங்களை அப்புறப்படுத்தி மின்தடையை போக்குமாறு கேட்டு கொண்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கு எதிரே கோலாஸ் நகர் பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வளர்ந்து மின் கம்பியில் பட்டு மின்வெட்டு ஏற்பட்டது.
உடனே தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி மின்துறை அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்து அங்கு மரங்களை அப்புறப்படுத்தி மின்தடையை போக்குமாறு கேட்டு கொண்டார்.
இதனை ஏற்று மின்துறை பணியாளர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து அங்கு சாய்ந்த மரங்களையும் மின்கம்பியில் உரசிய மரக் கிளைகளையும் விரைந்து அப்புறப்ப டுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் மின் வினியோகம் அளிக்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது கென்னடி எம்.எல்.ஏ.வுடன் தி.மு.க.நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ராஜி, செல்வம், காலப்பன், விநாயகம், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.