பிளஸ்-2 தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு: புதுவை-காரைக்காலில் 96.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
- புதுவையில் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 744 பேரில் 4 ஆயிரத்து 398 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 154 அரசு, தனியார் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுச்சேரி:
தமிழகம், புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தேர்வு முடிவுகளை வெளியிட்டு கூறியதாவது:-
புதுவை, காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி 96.13 சதவீதம். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி 91.96 சதவீதம். பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 ஆயிரத்து 876 மாணவர்களும், 7 ஆயிரத்து 547 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 423 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 486 மாணவர்கள், 7 ஆயிரத்து 379 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 865 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 6 ஆயிரத்து 130 பேரில் 5 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 8 ஆயிரத்து 293 பேரில் 8 ஆயிரத்து 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவையில் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 744 பேரில் 4 ஆயிரத்து 398 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 510 பேரில் 7 ஆயிரத்து 457 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காரைக்காலில் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய ஆயிரத்து 386 பேரில் ஆயிரத்து 239 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய 783 பேரில் 771 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்காலில் அரசு பள்ளியில் 89.39 சதவீதத்தினரும், தனியார் பள்ளியில் 98.47 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவையில் அரசு, தனியார் பள்ளிகளில் 96.74 சதவீதத்தினரும், காரைக்கால் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் 92.67 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவையில் அரசு பள்ளிகளில் மட்டும் 92.71 சதவீதம், காரைக்காலில் 89.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 154 அரசு, தனியார் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் புதுவையில் 61 பள்ளிகளும், காரைக்காலில் 7 பள்ளிகளும் அடங்கும். புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவையில் 2 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் இந்தி 1, இயற்பியல் 8, வேதியியல் 39, உயிரியல் 83, கணிப்பொறி அறிவியல் 98, கணிதம் 41, பொருளியல் 36, வணிகவியல் 144, கணக்குப்பதிவியல் 114, வணிக கணிதம் 25, கணிணி பயன்பாடு 117, தாவரவியல் 1, விலங்கியல் 2 என மொத்தம் 709 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கடந்த முறையை விட பிளஸ்-2 தேர்வில் 4.81 சதவீத மாணவர்கள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 10 சதவீத மாணவர்கள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
பேட்டியின்போது கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உடனிருந்தார்.