புதுச்சேரி

பெண் காவலர்களுக்கு  உடல் தகுதி தேர்வு நடந்த காட்சி.

பெண் காவலர்களுக்கு உடல் தகுதி தேர்வு

Published On 2023-03-27 06:17 GMT   |   Update On 2023-03-27 06:17 GMT
  • புதுவை காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலி பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.
  • தினமும் 500 முதல் 800 பேர் வரை உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது.

புதுச்சேரி:

புதுவை காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலி பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.

மொத்தமுள்ள 279 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதில் காவலர்களுக்காக 14 ஆயிரத்து 173 மற்றும் ஓட்டுனர்களுக்கான 877 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கோரிமேடு காவலர் மைதானத்தில் கடந்த 13-ந் தேதி தொடங்கியது.தினமும் 500 முதல் 800 பேர் வரை உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. முதலில் உடல் எடை, உயரம், மார்பக அளவு எடுக்கப்படுகிறது.

பின்னர் முழுமையான கணினி முறையில் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 12 நாட்களாக ஆண் காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து  பெண் காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு தொடங்கியது.

முதல்நாளான 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதை போலீஸ் ஐ.ஜி. சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பெண்களுக்கு 30-ந் தேதி வரை ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இறுதியாக 31-ந் தேதி ஓட்டுநனர்களுக்கான தேர்வு நடக்கிறது.

Tags:    

Similar News