புதுச்சேரி
கஞ்சா போதையில் போதையில் பொது மக்களை மிரட்டிய காட்சி.
கஞ்சா போதையில் இரும்புதடியுடன் பொதுமக்களை மிரட்டும் நபர்கள்
- மேரிஉழவர்கரை பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு 2 வாலிபர்கள் இரும்புத்தடியுடன் அவ்வழியே செல்பவர்களை அடித்து மிரட்டியுள்ளனர்.
- இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:
மேரிஉழவர்கரை பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு 2 வாலிபர்கள் இரும்புத்தடியுடன் அவ்வழியே செல்பவர்களை அடித்து மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக யாரும் புகார் செய்யவில்லை. இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வாலிபர்கள் யார்? என மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் வெளிமாநிலத்தவரை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகமாக நடக்கிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள்தான், கஞ்சா புகைத்துவிட்டு அப்பகுதியில் பலரையும் தாக்கியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.