புதுச்சேரி

பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

Published On 2022-07-31 09:52 IST   |   Update On 2022-07-31 09:52:00 IST
  • பெற்றோர்- ஆசிரியர் சங்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
  • விழாவை மூத்த விரிவுரையாளர்.விஜயலட்சுமி வரவேற்றார்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் சங்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. விழாவை மூத்த விரிவுரையாளர்.விஜயலட்சுமி வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கி மாணவர்கள் எவ்வாறு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்?

அவர்களை வீட்டில் பெற்றோர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்? மேலும், மாணவர்களின் சீருடை மற்றும் சிகை அலங்காரத்தில் பெற்றோர்கள் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து அறிவுரை கூறினார்.

விரிவுரையாளர்கள் கார்த்திகேயன், பழனி, வெங்கடேசன், சந்திரிகா மற்றும் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை வழங்கினர்.

ஆங்கில விரிவுரையாளர் அன்னி மேரி மார்ஸ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் முத்துக்குமரன், மணிகண்டன் மற்றும் எழிலரசி ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News