புதுச்சேரி

பாப்ஸ்கோ ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்திய காட்சி.

பாப்ஸ்கோ ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்

Published On 2023-03-18 13:47 IST   |   Update On 2023-03-18 13:47:00 IST
  • பாப்ஸ்கோ ஊழியர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் 7-வது நாளாக சட்டசபை அருகே போராட்டம் நடைபெற்றது.
  • பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

பாப்ஸ்கோ ஊழியர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் 7-வது நாளாக சட்டசபை அருகே போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு தலைமை வகித்தனர், ஏ.ஐ.டி.யூ.சி பொதுச் செயலாளர் சேதுசெல்வம், கவுரவ தலைவர் அபிஷேகம் முன்னிலை வகித்தனர்,

சங்க நிர்வாகிகள் நடராஜன், முனுசாமி, அமுதவல்லி, பத்மநாபன், ரவி, ஏழுமலை, முருகவேல், வேலு, பாலமுருகன், கமிட்டி உறுப்பினர்கள் ஜீவரத்தினம், ராஜூ, விசுவநாதன், குமரகுரு, அமுதா, அம்சவல்லி, நக்கீரன், சத்தியசீலன், ஊழியர்கள் கோவர்தன், குணா, கெஜவரதன், நாராயணன், பாலச்சந்தர், பார்த்திபன், செந்தில், சௌந்தர்ராஜன் காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப்அடைக்கலராஜ், பாலாசுப்பிரமணியன் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News