புதுச்சேரி

முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை வெங்கடேசன் எம்.எல்.ஏ. வழங்கினார். அருகில் மாநில தலைவர் சாமிநாதன் உள்ளார்.

முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை

Published On 2023-03-15 14:10 IST   |   Update On 2023-03-15 14:10:00 IST
  • தகுதியானவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
  • முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி பா.ஜனதா சட்ட மன்ற அலுவலகத்தில் நடந்தது.

புதுச்சேரி:

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் முதியோர், முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை பெற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி புதுவையில் பல்வேறு தொகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி பா.ஜனதா சட்ட மன்ற அலுவலகத்தில் நடந்தது.

பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். இதில் பா.ஜனதா பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News