புதுச்சேரி

கோப்பு படம்.

ஓ.பன்னீர்செல்வம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்- அன்பழகன் பேட்டி

Published On 2022-08-19 09:10 GMT   |   Update On 2022-08-19 09:10 GMT
  • ஐகோர்டு தீர்ப்புக்கு பிறகு இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை வரவேற்கிறோம்.
  • கட்சிக்கு துரோகம் செய்து, சட்ட விதிகளை மீறி எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஓ.பி.எஸ்.சுடன் எந்த ஒட்டும், உறவும் இல்லை. இணைந்து செயல்படலாம் என அழைக்கும் தகுதியும் அவருக்கு இல்லை.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐகோர்டு தீர்ப்புக்கு பிறகு இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை வரவேற்கிறோம். கட்சிக்கு துரோகம் செய்து, சட்ட விதிகளை மீறி எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஓ.பி.எஸ்.சுடன் எந்த ஒட்டும், உறவும் இல்லை. இணைந்து செயல்படலாம் என அழைக்கும் தகுதியும் அவருக்கு இல்லை.

ராணுவ கட்டுப்பாடு மிகுந்த அ.தி.மு.க.வில் தன் சுயநலத்துக்காக பல முறை பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை பலவீனப்படுத்தியவர். உட்கட்சி பிரச்சினைகளுக்கு கோர்ட்டை அனுகாதீர்கள் என ஐகோர்டு நீதிபதி ரமணா ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை பிரச்சினையின் போதும் கோர்ட்டை நாடி கட்சியை பலவீனப்படுத்தி வருகிறார். ஐகோர்டு அளித்துள்ள தீர்ப்பில் பல்வேறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. நீதிமன்றத்தை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் ஒன்றரை கோடி தொண்டர்களின் கருத்துக்களை 2 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவு செய்யலாமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது.

பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் சட்டங்களை நிறைவேற்றுகின்றனர்.அதேபோல கிளை, வட்டம், மாவட்டம், மாநிலம், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் பொதுக்குழு உறுப்பினர்கள். அவர்கள் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல.

ஒற்றை தலைமை அவசியம் என்பது கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் கருத்து. ஏனெனில் ஒவ்வொரு முறையும் போட்டி ஏற்படுத்தி கட்சியில் பிளவை உண்டாக்கி தி.மு.க.வின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஓ.பி.எஸ். செயல்படுகிறார். அதோடு அ.தி.மு.க. தொண்டர்கள் கோவிலாக நினைக்கும் கட்சி தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்து, ரவுடிகள் மூலம் அங்கிருந்த ஆவணங்களை அள்ளி சென்றவரை எப்படி ஏற்க முடியும்?

இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல, மறு ஆய்வுகுட்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். கட்சிக்கு துரோகம் செய்தவர்களோடு இணைந்து செயல்பட யாரும் செயல்பட நிர்பந்தம் செய்ய முடியாது. தீர்ப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 4 ½ ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நல்லாட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு அளித்த சான்று. இதை தி.மு.க.வினர் உணர வேண்டும். ஊழல் ஆட்சி என கூறுவதை கைவிட வேண்டும். அப்படி கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.

கருணாநிதியை பாராட்டுவது தான் ஜெயலலிதா விசுவாசமா..? கட்சிக்கு களங்கம் விளைவித்த

அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஓ.பி.எஸ். பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News