புதுச்சேரி

புதுவை மிஷன் வீதியில் உள்ள பொம்மபுர ஆதீன மடத்தில் நடந்த மயிலம் சுப்பிரமணியர் ஊஞ்சல் உற்சவத்தில் சன்னிதானம் சிவஞானபாலய சுவாமிகள் பங்கேற்ற காட்சி.

மயிலம் சுப்பிரமணியர் சாமிக்கு ஊஞ்சல் உற்சவம்

Published On 2023-03-10 10:20 IST   |   Update On 2023-03-10 10:20:00 IST
  • புதுவை மிஷன் வீதியில் மயிலம் பொம்மபுர ஆதீனம் மடத்தில் மயிலம் முருகர் சுப்ரமணியசுவாமி ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடந்தது.
  • மாசி மக தீர்த்தவாரியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

புதுச்சேரி:

புதுவை மிஷன் வீதியில் மயிலம் பொம்மபுர ஆதீனம் மடத்தில் மயிலம் முருகர் சுப்ரமணியசுவாமி ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுவையில் நடந்த மாசி மக தீர்த்த வாரியில் பங்கேற்க மயிலம் முருகன் சுப்ரமணிய சுவாமி உற்சவர் கடந்த மயிலத்தில் இருந்து புறப்பட்டு கடந்த புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பின்னர் மிஷன் வீதியில் உள்ள மயிலம் பொம்மபுர ஆதீனம் மடத்தில் உற்சவர் வைக்கப்பட்டு மிஷன் வீதி, நேரு வீதி வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. மயிலம் சுப்பிரமணியரின் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடந்தது.

சுப்பிரமணியருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. சன்னிதானம் சிவஞானபாலய சுவாமிகள் முன்னிலையில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சன்னிதானம் சிவஞானபாலய சுவாமிகளிடம் பொதுமக்கள் ஆசி பெற்றனர். பொம்மபுர மடத்தில் உள்ள உற்சவர் சுப்பிரமணியர் மயிலம் புறப்பட்டார்.

Tags:    

Similar News