புதுச்சேரி

முதலியார்பேட்டை அன்னை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக செயல்வழி மருத்துவ தின விழா நடந்த போது எடுத்த படம்.

உலக செயல்வழி மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவ தின விழா

Published On 2023-10-30 05:43 GMT   |   Update On 2023-10-30 05:43 GMT
  • உலக செயல்வழி மருத்துவ தினத்தின் விழிப்புணர்வாக 12-ம் வகுப்பு அறிவியல் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
  • பள்ளி முதல்வர் எழில் கல்பனா, ஆசிரியைகள் தேவகுமாரி, வளர்மதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி செயல்வழி மருத்துவ சங்கம் சார்பில் உலக செயல்வழி மருத்துவ தின விழா முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. உலக செயல்வழி மருத்துவ தினத்தின் விழிப்புணர்வாக 12-ம் வகுப்பு அறிவியல் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 12-ம் வகுப்பு முடித்தவுடன் மருத்துவம் சார்ந்ததுணை மருத்துவ படிப்பான செயல்வழி மருத்துவம் (4½ ஆண்டுகள்) மூலமாக மறு வாழ்வு சிகிச்சையான குழந் தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்பெறுவர் எனவும், இப்படிப்புக்கு வெளி நாட்டிலும் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இப்படிப்பு முடித்தவுடன் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி செயல்வழி மருத்துவ சங்க தலைவர் டாக்டர் இளவழகன் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். பள்ளி முதல்வர் எழில் கல்பனா, ஆசிரியைகள் தேவகுமாரி, வளர்மதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News