என் மலர்
நீங்கள் தேடியது "Medicine Day"
- இயற்கை மருத்துவ தினத்தை சர்வதேச இயற்கை மருத்துவ அமைப்பான சூர்யா பவுண்டேசன் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ மையத்துடன் சேர்ந்து கொண்டாடியது.
- இயற்கை மருத்துவம் மூலம் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்திக் கொள்வது என்று விளக்கினார்.
புதுச்சேரி:
புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் யோகா கல்வி மையம் 5-வது இயற்கை மருத்துவ தினத்தை சர்வதேச இயற்கை மருத்துவ அமைப்பான சூர்யா பவுண்டேசன் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ மையத்துடன் சேர்ந்து கொண்டாடியது. கல்லூரியின் யோகா கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் உதயசூரியன், இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.
முதுகலை வணிகவியல் தலைவர் குமார் இயற்கை மருத்துவத்தின் தொடக்கம் மற்றும் அதன் தேவையைப்பற்றி கூறினார். சர்வதேச இயற்கை மருத்துவ அமைப்பின் புதுவை ஒருங்கிணைப்பாளர் அத்துழாய் யோகாவின் சிறப்பு, அதன் முக்கியத்துவம், பல்வேறு நிலைகள், மூச்சுப்பயிற்சி பற்றி விளக்கினார். தென்னிந்தியாவின் தலைவர் பிராங்கிளின் ஹெர்பர்ட் தாஸ் காணொலி காட்சி மூலம் இயற்கை மருத்துவம் மூலம் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்திக் கொள்வது என்று விளக்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இயற்கை உணவாக முளை கட்டிய பாசிப்பயிறு, இனிப்பு அவல், பழக்கலவை , காய்கறி கலவை மற்றும் இஞ்சி, புதினா கலந்த எலுமிச்சைசாறு வழங்கப்பட்டது.
முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் அமுதா நன்றி கூறினார்.
- உலக செயல்வழி மருத்துவ தினத்தின் விழிப்புணர்வாக 12-ம் வகுப்பு அறிவியல் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- பள்ளி முதல்வர் எழில் கல்பனா, ஆசிரியைகள் தேவகுமாரி, வளர்மதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி செயல்வழி மருத்துவ சங்கம் சார்பில் உலக செயல்வழி மருத்துவ தின விழா முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. உலக செயல்வழி மருத்துவ தினத்தின் விழிப்புணர்வாக 12-ம் வகுப்பு அறிவியல் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 12-ம் வகுப்பு முடித்தவுடன் மருத்துவம் சார்ந்ததுணை மருத்துவ படிப்பான செயல்வழி மருத்துவம் (4½ ஆண்டுகள்) மூலமாக மறு வாழ்வு சிகிச்சையான குழந் தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்பெறுவர் எனவும், இப்படிப்புக்கு வெளி நாட்டிலும் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இப்படிப்பு முடித்தவுடன் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி செயல்வழி மருத்துவ சங்க தலைவர் டாக்டர் இளவழகன் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். பள்ளி முதல்வர் எழில் கல்பனா, ஆசிரியைகள் தேவகுமாரி, வளர்மதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.






