என் மலர்
புதுச்சேரி

இயற்கை மருத்துவ தின கொண்டாட்டம் நடைபெற்ற காட்சி.
இயற்கை மருத்துவ தின கொண்டாட்டம்
- இயற்கை மருத்துவ தினத்தை சர்வதேச இயற்கை மருத்துவ அமைப்பான சூர்யா பவுண்டேசன் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ மையத்துடன் சேர்ந்து கொண்டாடியது.
- இயற்கை மருத்துவம் மூலம் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்திக் கொள்வது என்று விளக்கினார்.
புதுச்சேரி:
புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் யோகா கல்வி மையம் 5-வது இயற்கை மருத்துவ தினத்தை சர்வதேச இயற்கை மருத்துவ அமைப்பான சூர்யா பவுண்டேசன் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ மையத்துடன் சேர்ந்து கொண்டாடியது. கல்லூரியின் யோகா கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் உதயசூரியன், இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.
முதுகலை வணிகவியல் தலைவர் குமார் இயற்கை மருத்துவத்தின் தொடக்கம் மற்றும் அதன் தேவையைப்பற்றி கூறினார். சர்வதேச இயற்கை மருத்துவ அமைப்பின் புதுவை ஒருங்கிணைப்பாளர் அத்துழாய் யோகாவின் சிறப்பு, அதன் முக்கியத்துவம், பல்வேறு நிலைகள், மூச்சுப்பயிற்சி பற்றி விளக்கினார். தென்னிந்தியாவின் தலைவர் பிராங்கிளின் ஹெர்பர்ட் தாஸ் காணொலி காட்சி மூலம் இயற்கை மருத்துவம் மூலம் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்திக் கொள்வது என்று விளக்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இயற்கை உணவாக முளை கட்டிய பாசிப்பயிறு, இனிப்பு அவல், பழக்கலவை , காய்கறி கலவை மற்றும் இஞ்சி, புதினா கலந்த எலுமிச்சைசாறு வழங்கப்பட்டது.
முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் அமுதா நன்றி கூறினார்.






