புதுச்சேரி

கோப்பு படம்.

கொரோனாவுக்கு மூதாட்டி பலி

Published On 2022-08-24 14:43 IST   |   Update On 2022-08-24 14:43:00 IST
  • புதுவையில் 982 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
  • புதுவையில் 12பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவையில் 982 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் புதுவையில் 29, காரைக்காலில் 5, ஏனாமில் 3 பேர் என புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 12பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 230, காரைக்காலில் 55, ஏனாமில் 17 என 302 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 12, காரைக்காலில் 14, ஏனாமில் 2 பேர் என 28 பேர் சிகிச்சையில் குண மடைந்தனர்.

புதுவை டி.என்.பாளையத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஜிப்மரில் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 968 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 20 லட்சத்து 13 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இத்தகவலை சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது.

Tags:    

Similar News