புதிய கணினி மையத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர் சந்திரபிரியங்கா.
null
புதிய கணினி மையம்-சபாநாயகர் ஏம்பலம் தொடங்கி வைத்தார்
- போக்குவரத்து மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா முன்னிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ரூ.32.40 லட்சம் மதிப்பில் புதிய கணினி மையத்தை திறந்து வைத்தார்.
- கணினி மையத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 400 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு தொழிலாளர் துறையின் கீழ் புதுவை மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசினர் ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் போக்குவரத்து மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா முன்னிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ரூ.32.40 லட்சம் மதிப்பில் புதிய கணினி மையத்தை திறந்து வைத்தார்.
இதில் 40 நவீன கணினிகள், அதிவேக இன்டர்நெட் வசதியுடன் உள்ளது.
இந்த தொழில் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டு அனைவரும் கணினி இயக்கும் திறன் பெறுவது மட்டுமல்லாமல் ஆண்டு இறுதியில் நடைபெறும் ஆன்லைன் கணினி அடிப்படையிலான கருத்தியல் தேர்வினை எதிர்கொள்ள முடியும்.
கணினி மையத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 400 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தனர்.