புதுச்சேரி
அரசு பள்ளிக்கு புதிய கட்டித்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.
- புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிட திறப்பு விழா நடந்தது.
- பெற்றோர் ஆசிரிய சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை மணவெளி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிட திறப்பு விழா நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, முதன்மைகல்வி அலுவலர் தனசெல்வன் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி, தனியார் நிறுவன தலைவர் ஹேமச்சந்திரன், துணை இயக்குனர் மேத்யூ வால்டர் மற்றும் கிராமலயா தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் ஆசிரிய சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.