புதுச்சேரி

புதுவை கம்பன் கலையரங்கில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ. கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்ற காட்சி.

தேசிய பெண் குழந்தைகள் தின விழா-முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு

Published On 2023-02-20 14:48 IST   |   Update On 2023-02-20 14:48:00 IST
  • புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
  • விழாவில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

துறை இயக்குனர் முத்துமீனா வரவேற்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கென்னடி எம்.எல்.ஏ., நலத்துறை செயலர் உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு செலுத்தி அரசு பராமரிப்பில் உள்ள 47 குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி அஞ்சலக புத்தகத்தை வழங்கினார்.

துறையின் இணை இயக்குனர் அமுதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News