புதுச்சேரி

நடைபயணம் வந்த பக்தர்களுக்கு தேசியக்கொடியுடன் வந்த காட்சி.

பக்தர்களுக்கு தேசியக்கொடி

Published On 2022-08-12 08:54 GMT   |   Update On 2022-08-12 08:54 GMT
  • திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் மாதாந்திர பவுர்ணமி கிரிவல பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • புனித திருகாமேஸ்வரன் ஆன்மீக பணியில் கிடைத்த நிதியை கொண்டு தேசிய கொடிகளை இலவசமாக வழங்கினார்.

புதுச்சேரி:

வில்லியனூரில் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் மாதாந்திர பவுர்ணமி கிரிவல பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் சங்கீதா, ஆனந்தன் தம்பதியரின் மகன் கயிலை புனித திருகாமேஸ்வரன் ஆன்மீக பணியில் கிடைத்த நிதியை கொண்டு தேசிய கொடிகளை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் மனைவி ஆதிலட்சுமி தேசிய கொடியினை பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் பொழுது வாஞ்சிநாதன் மன்ற தலைவர் ராமன், கலிய முருகன், டெரகோட்டா முனுசாமி, சரவணன், சிவராஜன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News