புதுச்சேரி

கோப்பு படம்

3 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-09-09 11:27 IST   |   Update On 2022-09-09 11:27:00 IST
  • புதுவையில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
  • புதுவையில் தங்கி அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த வருகிறார்.

புதுச்சேரி:

புதுவையில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

லாஸ்பேட்டையை அடுத்த பெத்செட்டிபேட்டை பாவேந்தர் வீதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது22). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை மேரி கட்டிடம் அருகே நிறுத்தி விட்டு கடற்கரைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சஞ்சய் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றி ருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சஞ்சய் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரைக்காலை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது21). இவர் புதுவையில் தங்கி அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த வருகிறார்.

சம்பவத்தன்று இவர் புதுவை-கடலூர் சாலையில் வணிக வளாகம் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சினிமா பார்க்க சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடு போயிருப்பதை கண்டு சந்தோஷ்குமார் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோட்டக்குப்பம் இந்திராநகரை சேர்ந்தவர் கணேஷ் (38). சம்பவத்தன்று இவர் புதுவை 100 அடி ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். பின்னர் பணி முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் கணேஷ் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News