வீதி வீதியாக நடந்து சென்று கொசு மருந்து தெளிக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்-கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- உப்பளம் தொகுதியில் கொசுமருந்து தௌிக்கும் பணியை தி.மு.க.தொடர்ந்து செய்து வருகிறது
- பொதுமக்கள் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சலால் மிகவும் அவதிவுற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதியில் கொசுமருந்து தௌிக்கும் பணியை தி.மு.க.தொடர்ந்து செய்து வருகிறது.
தற்போது கொசுவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சலால் மிகவும் அவதிவுற்று வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி தனது சொந்த செலவில் உப்பளம் தொகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியினை தொடர்ந்து செய்து வருகின்றார் .
பெரிய பள்ளி, ராசு உடையார் தோட்டம், பிரான்சுவாதோப்பு, ,ஆகிய இடங்களில் கென்னடி எம்.எல்.ஏ. தனது கட்சி தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்று கொசு மருந்து தெளிக்கும் பணியினை தீவிரமாக மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி ,கிளை செயலாளர்கள் விநாயகம், காலப்பன், செல்வம், ராகேஷ், லாரன்ஸ், மற்றும் ஈசாக்கு, தி.மு.க. நிவர்வாகிகள் மோரிஸ், ரகுமான், சிரஞ்சீவி, மரி ஆகியோர் உடன் இருந்தனர்.