புதுச்சேரி
இரு கையிலும் வெட்டுப்பட்ட காயத்துடன் திரியும் குரங்கு
- புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.
- குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.
அதன் 2 கைகளிலும் வெட்டு காயங்கள் காணப்படுகிறது. இந்த குரங்கை அப்பகுதி மக்கள் அனுதாபத்துடன் பார்த்து உணவு வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் குரங்குக்கு பழத்தில் மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முயற்சித்தனர்.
ஆனால் குரங்கு மருந்து இருப்பதை அறிந்து பழத்தை தூக்கி எறிந்து விட்டது. குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.