புதுச்சேரி

விழாவில் வெற்றி பெற்ற பெண்களுக்கு கேடயம் வழங்கிய காட்சி.

null

மகளிருக்கான விருது வழங்கம் நிகழ்ச்சி

Published On 2023-03-18 10:51 IST   |   Update On 2023-03-18 11:09:00 IST
  • புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
  • சிறு தானியத்தில் தயாரான உணவு பொருள்களை காட்சி படுத்தி அதில் சிறந்த உணவினை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தினர்.

புதுச்சேரி:

புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். இந்த ஆண்டின் சிறந்த மகளிருக்கான அன் சங் ஹீரோயின் என்ற தலைப்பிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக புதுவையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெற்ற கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பத்து சிறந்த கிராமப்புற மகளிர் தேர்ந்தேடுக்கப்பட்டு விருது வழங்கப் பெற்றனர். விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட புதுவை ஈடன் குவாலிட்டி செயலாளர் சந்ஹிட்டா நட்கர்னி சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து கல்லூரி பெண் பேராசிரியர்கள் தாங்கள் சிறு தானியத்தில் தயாரான உணவு பொருள்களை காட்சி படுத்தி அதில் சிறந்த உணவினை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தினர்.

விழா ஏற்பாடுகளை கல்லூரி ஆராய்ச்சி துறை தலைவர் வள்ளி மற்றும் வுமன் எம்பவெர்மென்ட் செல் தலைவர் பூங்குழலி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News