புதுச்சேரி

அமேசான் நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் சிவா மற்றும் குழுவினர், கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ-மாணவிகள் உள்ளனர்.

எம்.ஐ.டி. கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

Published On 2023-09-12 09:23 GMT   |   Update On 2023-09-12 09:23 GMT
  • ஆன்லைன்எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
  • நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

புதுச்சேரி:

புதுவை கலிதீர்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் சென்னை அமேசான் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.

இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனித வளத்துறை மேலாளர் சிவா, அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். ஆன்லைன்எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கி ணைப்பாளர்களும் கலந்து கொண்ட னர்.

இந்த முகாமில் கல்லூரியின் 2023-ம் ஆண்டு, இளங்கலை பொறியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவ- மாணவிகள் 150-ம் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலர் வேலைவாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்து இருந்தார்.

Tags:    

Similar News