புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.

எம்.ஐ.டி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

Update: 2023-03-30 04:44 GMT
  • புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சென்னை ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மேலாண்மைத் துறை மாணவர்களுக்கானவேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
  • எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினார்.

புதுச்சேரி:

புதுவை கலிதீர்த்தா ள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி கல்லூரி), சென்னை ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மேலாண்மைத் துறை மாணவர்க ளுக்கானவேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

இந்த முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் மதன் அருண், நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினார்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் எம்.ஐ.டி கல்லூரி மேலாண்மை துறையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், மேலாண்மைத் துறை தலைவர் பாஸ்கரன், பேரா சிரியர்கள் வைத்தீஸ்வரன் மற்றும் மன்சூர் இப்ராஹிம் ஆகியோர் செய்து இருந்தார்.

Tags:    

Similar News