புதுச்சேரி

கர்லாக் கட்டை சுழற்றி உலக சாதனை படைத்த மாணவிகளை படத்தில் காணலாம்.

எம்.ஐ.டி. கல்லூரி மாணவிகள் உலக சாதனை

Published On 2022-06-22 04:34 GMT   |   Update On 2022-06-22 04:34 GMT
  • எம்.ஐ.டி. கல்லூரியில் கர்லா கட்டை சுழற்றி மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
  • மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

புதுச்சேரி:

எம்.ஐ.டி. கல்லூரியில் கர்லா கட்டை சுழற்றி மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.

மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி கர்லாக் கட்டை யோகா சாதனை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர் கண், உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான இந்திய பெண்கள் நெட்வொர்க் ஒருங்கிணைப் பாளர் வித்யாஸ்ரீ, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சிறப்பு மேற்பார்வையாளர் விவேக் நாயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், 52 பெண்கள் கலந்து கொண்டு கர்லாக் கட்டையின் மூலம் அரை மணி நேரத்தின் 1400 சுற்றுகள் வீதம் சுழற்றி சாதனை புரிந்தனர்.

இச்சாதனையே, உலக அளவில் முதல் முறையாக பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து கர்லாக்கட்டை யோகா செய்த நிகழ்ச்சியாகும் இச்சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.

நிகழ்ச்சியை, பெண்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைப்பாளர் வள்ளி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பரமாத்மம் நிறுவனர் விஜயபிரசாத் நன்றி கூறினார்.

மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பெண்களுக்கான அதிகார அமைப்பு, யோகா குழுமம், பரமாத்மம் மரபு, இந்தியன் உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலை கூடம் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News